செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

எங்கள் ஊர் செக்கு

கருணா(நிதி)

"போர் நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு வை. கோ தான் காரணம் " என்று குமரன் பத்மநாபன் கூறியுள்ளார் என்று கருணாநிதி கூறுகிறார். நல்ல பொருத்தம் .
வேலிக்கு ஓனான் சாட்சி .

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

நாளை வரலாறு கூறட்டும் போ

ஏடா தமிழா இன்னும் உறங்குகிறாய்
தெற்கிருந்து கேட்கின்ற கதறல் உன் காதில் விழவில்லை
ஈழத்து சோதரியர் மானம் அழிவதுந்தன் மண்டைக்குள் ஏறவில்லை
இனமானம் இல்லாத பிணமாகிப் போனாயோ
நன்றி கெட்டு நக்கி திரிகின்ற நாயினும் கீழ் ஆனாயோ
புறநானுற்று வீரமெல்லாம் புனைகதையா
வெறும் சோற்றுக்கும் சில நூற்றுக்கும்
வாழ்வதா வாழ்க்கை
மொழி என்றால் 'விழி' என்று வாழ்ந்திருந்த
முன்னோனின் பிள்ளையா நீ
எச்சில் இலை நாய்கள் என ஆரியனின்
கண் சாடை கணித்து கை பார்த்து
அவன் கால் நக்கி திரிகின்றாய்
தன் இனம் காக்க மொழி காக்க
தன் இன்னுயிரை தந்த
எம் மறவர் இறந்தாலும் வாழ்கின்றார்
அனால் நீ
ச்சீ ....... நானென்ன சொல்ல
நாளை வரலாறு கூறட்டும் போ

என்ன செய்ய தமிழ் இனத்தை

எல்லாம் முடிந்து விட்டதாய் எதிரி கொக்கரிக்கிறான் இன்னும் நீ இலவச தொலைக்காட்சியிலும் ,சினிமா காட்சிகளிலும் மயங்கி கிடக்கிறாய்
தமிழா இன்னுமா உறங்குகிறாய்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரஙகாத
சோற்றால் அடித்த பிண்டம் ஆனாயோ
ஒன்றை தெளிவாய் அறிந்து கொள்
சுதந்திர போர் என்றும் தோற்றதில்லை
நாளை மலரும் தமிழ் ஈழம்